தேக்கடி 15வது மலர்கண்காட்சி மேள தளங்களுடன் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட்டு சென்றுள்ளனர் . மலர் கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு தேக்கடி 15வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியது. இது, மே 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மண்ணரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் இந்த மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில்,மொத்தம் 44 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மலர் கண்காட்சி தொடங்கிய 10வது நாளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். தேக்கடி பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் கேரள பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

தேக்கடி மலர் கண்காட்சி
இதையும் படிங்க : மதுரை சித்திரை திருவிழா 2023| கீழமாசி வீதியில் நடத்தப்பட்ட முகூர்த்தக்கால்!
இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருபவர் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மலர் கண்காட்சிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் அதிகமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வருகை புரிகின்றனர்.
இங்கே, பல்லாயிரம்க்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
30,000 சதுர அடியில் 50க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், 44 நாட்களில்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: