ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டிருந்தன. இந்நிலையில், யானைகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வருகின்றன.

இதனிடையே ஒற்றை யானை கண்டகானப்பள்ளி கிராமத்தின் வழியாக அகலக்கோட்டை கிராமத்துக்குள் சென்று அப்பகுதியில் உள்ள சாலையில் சுற்றி வந்தது.

இதனால், அச்சம் அடைந்த கிராம மக்கள் வீட்டிலேயே முடங்கினர். நீண்ட நேரத்துக்குப்பின்னர் அப்பகுதியில் உள்ள விளை நிலத்துக்குள் சென்ற ஒற்றை யானை, அப்பகுதி இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அப்படி மக்கள் கூறும் போது, ​​“அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதால், அச்சமாக உள்ளது. மீண்டும் ஒற்றை யானை கிராமத்துக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link