திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி (பொறுப்பு) உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ், தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் தாழையூத்து உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் நாங்குநேரி உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மேலும், வள்ளியூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமையில் வள்ளியூர் உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் (IUCAW) துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் (பொறுப்பு) தலைமையில் அம்பாசமுத்திரங்களிலும் உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், சேரன்மகாதேவி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து காவல் நிலையங்களும் நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதையும் படிங்க : திடீரென மாறிய வானிலை.. சங்கரன்கோவிலில் இடி, மின்னலுடன் கனமழை..

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நிலுவையில் இருந்து மொத்தம் 86 மனுக்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link