பெங்களூரு அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோலி விளையாடக் கூடாது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 4 ஆவது வீரராக விராட் கோலி களம் இறங்கி விளையாடி வருகிறார். இதற்கு மாற்றமாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. மும்பை அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் முதல் போட்டியில் விராட் கோலி அதிரடியாக அரைச்சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- பெங்களூரு அணியின் தொடக்க வீரராக விராட் கோலி விளையாடி ரன்களைச் சேர்த்துள்ளார். ஆனால் இந்த சீசன் முழுவதும் அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி ரன்களை குவிப்பார் என்று எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. அவரைப் போன்று அணியில் உள்ள மற்ற வீரர்களும் தயாராக வேண்டும். அப்போதுதான் அணி பலமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். இந்த அடிப்படையில் விராட் கோலி தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

இதேபோன்று பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘என்னைப் பொருத்தவரையில் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்டி பலவீனமாக இருப்பதாக தெரிகிறது. இதனை மற்ற அணிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும். விராட் கோலி மற்றும் டூப்ளசிஸ் விக்கெட்டுகளை முன்னரே எடுத்து விட்டால் அது எதிரணிக்கு பலமாக அமையும்.’ என்று கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30-க்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link