மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் பெரிதாக ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 13 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்ந்து 59,846 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்வடைந்து 17,624 ஆக இருந்தது.

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கிய பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 83.45 புள்ளிகள் உயர்வடைந்து 59,916.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.70 புள்ளிகள் உயர்வடைந்து 17,628.85 ஆக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. வாகனம் மற்றும் தகவல்தொழில்நுட்ப பங்குகள் லாபத்திற்கு வழிவகுத்தன. இருந்தபோதிலும் நிலையில்லாமல் சென்ற வர்த்தக போக்கின் இறுதி நேரத்தில் நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிவு சந்தையை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 60,109 வரை உயர்ந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 13.54 புள்ளிகள் உயர்வடைந்து 59,846.51 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,624.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், என்டிபிசி, டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், ஈசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டன.

Source link