சென்னை: வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறை சார்பில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார், "கோடை வெப்பம் தாக்க துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.Source link