விழுப்புரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற இருந்த லட்ச தீப திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று லட்ச தீப திருவிழாவும், கோயில் வளாகம் அருகே 90 அடி உயரத்தில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆஞ்சநேயர் கோயிலில் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று வழக்கமாக நடைபெறும் லட்ச தீப திருவிழாவும், 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல லட்ச தீபத் திருவிழாவையொட்டி 10 நாட்களுக்கு திரு.வி.க வீதியில் சாலையோரம் அமைக்கப்படும் சிறப்பு கடைகளும் இந்த ஆண்டு அமைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆண்டுதோறும் நடைபெறும் லட்ச தீப திருவிழாவில் விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்களை வாங்கி உற்சாகத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் விழுப்புரம் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link