அதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2022 அன்று ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவில், ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சந்துரு

நீதிபதி சந்துரு

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து, ஏற்கனவே உள்ள விதிகளின்படி ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி, 71 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு சமர்ப்பித்தார்.

அதன் பிறகு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர், அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார் ஆளுநர்.Source link