அவரிடமிருந்த 5,500 ரூபாய், கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, ஐபோன் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் பறித்துள்ளது. பின்னர் காரில் எர்ணாகுளத்துக்குச் சென்றவர்கள், ஆளில்லாத ஒரு வீட்டில் அந்த இளைஞரை அடைத்துவைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். அவரைக் கட்டிவைத்து மொபைல் சார்ஜர் பின்னை அவரது நாக்கில் வைத்து ஷாக் கொடுத்துள்ளனர். கஞ்சா புகைக்க வைத்தும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
இளைஞரை நிர்வாணப்படுத்தி அவரது ஐபோனை வைத்தே நிர்வாண வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தங்கள் செல்போனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பின்னர், `இனியும் காதலை கைவிடாமல் இருந்தால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவோம்’ என மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இளைஞரை மீண்டும் காரில் ஏற்றி வைரிலா பகுதியில் சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இளைஞர் தனது உறவினர்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். அவரின் உறவினர்கள் சென்று இளைஞரை மீட்டு களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இளைஞர் அளித்தப் புகாரின்பேரில் லட்சுமி பிரியா, அவரின் புதிய காதலன் உட்பட ஏழு பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இளம்பெண் லட்சுமி பிரியாவை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.