ஈரோட்டில் காரை பின்னோக்கி இயக்கியபோது, ​​இரு கார்களுக்கிடையே சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மூத்த மகன் தருண் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் தனீஷ்(7) இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று முத்துச்சாமியின் மகன்களும், அவரது பாட்டி உள்ளிட்ட மூன்று பேரும், அந்தியூர் தேர் வீதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை பார்க்க காரில் வந்துள்ளனர். காரை முத்துச்சாமியின் மைத்துனர் கனகராஜ் இயக்கி வந்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)

மருத்துவமனை சென்றதும் மூன்று பேரையும் இறக்கிவிட்ட கனகராஜ், காரை திருப்புவதற்காக பின்னோக்கி வேகமாக இயக்கியுள்ளார். அப்போது பின்புறம் இருந்த தனீஷ் மற்றும் தருண் ஆகிய இருவர் மீது மோதிய கார் பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது பலமாக மோதி நின்றது.

இரண்டு கார்களுக்கு இடையே சிக்கிய சிறுவன் தனீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட தருண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் காருக்கு இடையில் சிக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link