தேனி -தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில் நிறத்தம், டிக்கெட் கவுன்டர் அமைக்க பொதுமக்கள் அரசு பணியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

போடி – மதுரை மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்ற 2011 இல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரூ.350 கோடி செலவில் ரயில் பாதை பணிகள் கடந்தாண்டு நிறைவடைந்து தேனி வரை ரயில் சேவை துவங்கியது. பத்து ஆண்டுகளுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த போது ரயில் கலெக்டர் அலுவலகம் எதிரே நின்று செல்லும் வகையில் ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிறுத்தத்தால் மதுரையில் இருந்து கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள், பிற மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர் சிரமம் இன்றி ரயிலில் கலெக்டர் ஆபீஸ் ரயில் நிறுத்தத்தில் ஏறி, இறங்கி சென்றனர். ரயில் அகலபாதை அமைக்கும் பணியின் போது இங்கு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரயில் நின்று செல்ல இதுவரை நிறுத்தம் அமைக்க வசதி செய்யவில்லை. தேனியில் ரயில்வே ஸ்டேஷன் நகரில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள பயணிகள் ஆட்டோ, கார், டூவீலர்களில் மட்டுமே சென்று வர முடிகிறது. இதனால் குறைந்தளவு பயணிகளை தேனியில் ரயிலை பயன்படுத்துகின்றனர். கலெக்டர் ஆபீஸ் அருகிலோ, தேனி புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மதுரை-தேனி ரோடு சந்திப்பு பகுதியில் ரயில் நிறுத்தம் அமைத்தால் பயணிகள் எளிதாக அதிகமானோர் ரயில்சேவை பயன்படுத்துவார்கள். தற்போது பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் அதன் அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைந்தால் பலனளிக்கும்.

நடேசன், ரயில்வே ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர், தேனி.தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டன. ஆலோசனைக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். அங்கு ரயில் நின்று சென்றால் கம்பம், குமுளி, பெரியகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் ரயிலில் செல்ல ஏதுவாக இருக்கும். அங்கு டிக்கெட் கவுண்டர், நடைமேடையுடன் ரயில்கள் நின்று சென்றால் அதிகளவு மக்கள் ரயிலில் பயணிப்பார்கள். ரயில்கள் நின்று செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

விளம்பரம்




Source link