ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணி கடைசி பந்தில் தோல்வியடைந்தது. இதைத் தாங்க முடியாமல் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்தது. விராட் கோலி 61 ரன்னும், டூப்ளசிஸ் 79 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் அதிரடியால் வெற்றிப் பாதைக்கு திரும்பிய லக்னோ அணி கடைசி பந்தில் பை-ஸில் சிங்கிள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் மிகவும் விறுவிறுப்பான மேட்ச்சுகளில் ஒன்றாக இந்த ஆட்டம் அமைந்தது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்பட்ட நிலையில் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு பவுலர்களே முக்கிய காரணம் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், தோல்வியை தாங்க முடியாமல் ரசிகை ஒருவர் கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:

Source link