பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி வரும் மாணவியின் தந்தை திடீரென உயிரிழக்க, அந்த துயரச் சூழலிலும் தேர்வெழுதிய மாணவி பள்ளிக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம், பலரையும் கலங்க வைத்தது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்துள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் கடைசி மகள் வினிதா அம்பகரத்தூரில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். புதுச்சேரியில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில மொழித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, மாணவி வினிதாவின் தந்தை விஜயகுமார் திடீரென மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை 3 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.