திண்டுக்கல்: கொடைக்கானலில் சீசன் தொடங் கிய நிலையில், ஆண்டுதோறும் அனுபவிக்கும் சிரமங்கள் இந்த ஆண்டு தொடர்வதாக சுற்றுலா பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர்.

ஆனால், இந்த ஆண்டாவது நிம்மதியாக சிரமங்கள் ஏதுமின்றி சுற்றுலாவை அனுபவித்து செல் லலாம் என எதிர்பார்த்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் கொடைக்கானலில் திரண்டனர். ஆனால், சீசன் தொடங்கிய நிலையில் போக்கு வரத்து நெரிசலும் தற்போதே தொடங்கி விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சீசன் மாதங்கள் மற்றும் வாரவி டுமுறை நாட்களில் கூடுதல் போலீஸாரை தற்காலிக பணியாக கொடைக்கானலுக்கு மாவட்ட காவல்துறை அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதை நடை முறைப்படுத்தாததால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது வாடிக் கையாக உள்ளது.

ஒரு நாள் மட்டுமே சுற்றுலா வந்து செல்வோர் கொடைக்கானலை அரைகுறையாகப் பார்த்து விட்டு அதிருப்தியுடன் பாதியிலேயே திரும்பும் நிலைதான் உள்ளது. இந்த ஆண்டாவது மாவட்ட காவல் துறை கோடை சீசனில் கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.

மேலும் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்தால், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்து தரப் படவில்லை.

எனவே கூடுதல் கழிப்பறைகளை ஏற்பாடு செய்து அவற்றை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் உணவகங்களில் உணவுகளின் விலைப் பட்டியலையே காண முடியவில்லை. இதை நகராட்சி சுகாதாரத் துறை கண்காணித்து, உணவகங்கள் சுற்றுலா பயணிகளிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

தூய்மைப் பணி: நகரில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, பொது இடங்களில் தூய்மையைப் பரா மரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளால் அதிகமான வருவாய் ஈட்டும் நகராட்சி நிர்வாகம், அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி சுற்றுலா பயணிகளிடம் எழுகிறது.

போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு, சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடி வசூல் இல்லாமல் இருந்தாலே கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயணம் இனிமையானதாக அமையும். முதற்கட்டமாக, இந்த 2 அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும் என் பதே சுற்றுலா பயணிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சித் தலைவர் செல்லத்துரை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கொடைக்கானலில் கழிப்பறை வசதி அதிகரிக்க சுற்றுலாத் தலங்களில் புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவை இந்த வாரத்தில் திறக்கப்படும்.

ஹோட்டல்களில் சுகாதாரமான உணவு கிடைக்க, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் செயல்படும். ஹோட்டல்களில் உணவுப் பட்டியலை வைக்கவும், அதை கண்காணிக் கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் 15 முதல் கூடுதல் போலி சாரை கொடைக்கானலுக்கு அனுப்ப முடிவு. இதுகுறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி. நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் போக்குவரத்து பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். சில நாட்களில் அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் நடத்தி சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரும். இவ்வாறு அவர் கூறினார்.





Source link