தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனூர் நாடு அமைந்துள்ளது. சுமார் 18 ஊர்கள் அடங்கிய இந்த கோனூர் நாடு பகுதியில் உள்ள கோட்டைத் தெருவில் வளவண்ட அய்யனார் சாமி கிராம மக்களுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலித்து வரும் ஐயனாருக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஒருவார காலம் திருவிழா நடத்தப்படும்.
இதில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்யப்பட்டது. மேலும் 18 ஊர் கிராமத்தை சேர்ந்த பலர் வெளியூர்களில் வசித்து வருவதால் திருவிழா நேரத்தில் அய்யனாரின் தரிசனத்தை பெற தவறாமல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
பால்குடம் காவடி, திருவிழா, இரவு முழுவதும் தேரோட்டம் என ஒரு வாரம் நடைபெறும். 18 கிராமத்தில் பிறந்து கல்யாணம் ஆன பெண்களுக்கு பிறந்த இடத்திலிருந்து பாக்கு, வெற்றிலை, பழம், இனிப்பு வகைகளை கடைசி நாள் திருவிழாவில் சந்தித்து வழங்குவது முக்கிய சிறப்பு ஆகும். இந்த பரவல் காரணமாக 2 வருடமாக திருவிழா நடைபெறாத நிலையில், சென்ற ஆண்டு மறுபடியும் திருவிழா தொடர்ந்து வெகு விமர்சையாக நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் இந்த ஆண்டு பால்குடம் காவடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. திருவிழாவில் 18 ஊர் கிராம மக்களும் கலந்து கொண்ட நிலையில் கோனூர் நாடே விழாக்கோலம் பூண்டது. 18 ஊர்களை சேர்ந்த மக்கள் காவடி பால்குடம் எடுத்தல், அன்னதானம், மொட்டை அடித்தல் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு அய்யனாரின் அருளை பெற்று உறவினர்களை விழாவில் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் முடிந்து புதன் கிழமை வரை திருவிழா நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: