சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக தனியொருவனாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 99 ரன்களை குவித்துள்ளார். இந்த மேட்ச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று என கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், ரசிகர்களின் பார்வை தவனின் ஆட்டம் பக்கம் தற்போது திரும்பியுள்ளது.
சென்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஷிகர் தவான் 99 ரன்களை அதிரடியாக குவித்தார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராகுல் திரிபாதி 74 ரன்களும், எய்டன் மார்க்ரம் 37 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியில் தனி நபராக ஷிகர் தவான் ரன்களை குவித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரைன் லாரா கூறுகையில், ‘ஷிகர் தவனின் பேட்டியை நிச்சயம் பாராட்ட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இதை நான் கூறுவேன். ஒவ்வொரு பந்தையும் அவர்ஆடிய விதம், ஆட்டத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் அழகாக கொண்டு வந்தது’ என்றார். கிறிஸ் கெயில் கூறியுள்ளார், ‘அற்புதமான ஆட்டத்தை ஷிகர் தவான் தனது அணிக்காக விளையாடியுள்ளார். அவர் சதம் அடித்திருக்க வேண்டும். 1 ரன்னில் சதம் தவற விடப்பட்டது வருத்தம் அளிக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: