புதுடில்லி : முன்னாள் பிரதமர் இந்திரா கொலையை தொடர்ந்து, நடந்த கலவரத்தில் சீக்கியர்கள், கொல்லப்பட்டது தொடர்பாக, காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லரின், குரல் மாதிரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர்.

கடந்த, 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா, சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

இதை தொடர்ந்து, டில்லியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில், பலியான 3,325 பேர், 2,733 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள், அதிகம் சீக்கியர்களே இறந்தனர்.

இந்த வழக்கில், காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்டலர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு, எதிராக ஆதாரங்கள் இல்லை என, சி.பி.ஐ., 2009ல் அறிவித்ததால், வழக்கில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த, 2014ல் ஆட்சிக்கு வந்த, பா.ஜ., அரசு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, 2015ல் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்டலரின், குரல் மாதிரியை பதிவு செய்ய, சம்மன் அனுப்பினர்.

இதை தொடர்ந்து, இன்று (ஏப்.,11)ம் தேதி, மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு வந்த, ஜெகதீஷ் டைட்டலரின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டன.

ஆய்வில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம்:

சமீபத்திய தமிழ் செய்திகள்

இந்த வழக்கில், நான் என்ன செய்தேன், எனக்கு எதிராக, ஒரு ஆதாரம் இருந்தால் கூட, நான் துாக்கில் தொங்க தயாராக உள்ளேன். 1984ம் ஆண்டு கலவரத்துக்காக, தற்போதைய குரல் பதிவு நடக்கவில்லை ; இது, வேறொரு வழக்கு.

இவ்வாறு, அவர் கூறினார்.

சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினார்,‛இந்த வழக்கில், எங்களுக்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, அவரது குரல் மாதிரியை பதிவு செய்துள்ளோம்,’ என்றனர்.Source link