வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘என் விகடன்’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஊரைப்பற்றி பேசணும்ன்னாலே எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.. அப்படி இருக்க… ஊரின் ஸ்பெஷல் சுவையைப் பற்றி பேசாமல் இருந்தால்… எப்பூடி..?
எங்க ஊரில் (வளவனூர்) யார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வேர்க்கடலை இடம்பெற்றிருக்கும். ஆம் எங்கள் ஊரில் வேர்க்கடலை பயிரிடுவது மிகவும் அதிகம். அதே போல் பனங்கிழங்கு, நுங்கு, கத்தரிக்காய் (நறையூர்) இவைகளும் அதிகம். அவற்றை வைத்து அம்மா செய்யும் சில ரெசிபிகள் இதோ ..
முதலில் ஜூஸிலிருந்து ஆரம்பிப்போம்.
*நுங்கு ஜூஸ்
இளசாக இருக்கும் நான்கு நுங்கு சுளைகளுடன், நாட்டு சர்க்கரை நன்னாரிசிரப் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அதில் தேவையான அளவு நீர் சேர்க்க நன்னாரி வாசத்துடன் நுங்கு ஜூஸ் ரெடி. வீட்டிற்கு கோபமாக யாராவது வந்தால் கூட.. இந்த ஜூஸை குடிக்க புன்னகையுடன் செல்வது நிச்சயம்.
*பனங்கிழங்கு சப்ஜி
இலசான நான்கு பனங்கிழங்கை நன்கு வேகவைத்து, தோல் உரித்து, நார் எடுத்து ,சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.