கிருஷ்ணகிரி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், சூளகிரி, பேரிகை பகுதிகளில் மலர்ச் செடிகளில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், பூக்களின் தரமும் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதேஷ்ண நிலை மலர் சாகுபடிக்குச் சாதகமாக உள்ளது.