ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தோனி மற்றும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சுசாம்சன் உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ராஜஸ்தான் அணி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று +2.067 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணியும் இதேபோன்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் +0.356 என்ற ரன்ரேட்டின் அடிப்படையில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தோனி மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ, லைக்ஸ் மற்றும் வியூஸ்களை குவித்து வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link