கடகம் (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புத்திசாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.



Source link