மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு பல விதமான நற்பலன்களை அடைய போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லவையாக இருக்கும். உங்களை விட உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் திறமையைப் பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்னச் சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறனை அதிகரிக்கும். மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து கொள்ள முடியும்.