ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தங்களது முழு திறமையை இன்று வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள் – பிருத்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல்(வ), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
மும்பை அணி வீரர்கள் – ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
நடப்பு சீசனில் இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற முடியாத நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்ற போதிலும் மும்பை அணி கடந்த சீசனிலும், தற்போதைய சீசனிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணியும், 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணியும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் அடிப்படையில் ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: