ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்தது டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர். பிரித்வி ஷா 15 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மணிஷ் பாண்டே 26 ரன்கள் எடுத்தார்.
யாஷ் துல் 2 ரன்னும், ரோவ்மன் பவெல் 4 ரன்னும் லலித் யாதவ் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து இணைந்த டேவிட் வார்னர் – அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் படேல் 54 ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணியில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர் 19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 172 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோப் மற்றும் பியுஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா, இந்த மேட்ச்சில் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்தார். மற்றொரு தொடக்க இஷான் கிஷன் 31 ரன்களும், திலக் வர்மா 41 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 13 ரன்னும் கேமரூன் க்ரீன் 17 ரன்னும் எடுக்க கடைசி பந்தில் மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: