திண்டுக்கல்-நத்தம் சாலையில் அமைந்துள்ள சிறுமலை வனப்பகுதியானது, அனைத்து காலக்கட்டங்களிலும் இதமான தட்பவெட்ப நிலை காணப்படுகிறது. இந்த சிறுமலை வனப் பகுதியில் காட்டு மாடு, குரங்குகள், கடமான், கேளையாடு, முயல், கழுதை, காட்டு அணி போன்ற வனவிலங்குகள், பலவகையான பறவை இனங்கள் மற்றும் பல்வேறு வகையான மூலிகை செடிகள் உள்ளன.
இப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த சிறுமலை வனப்பகுதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலா பயணம் செய்யும் பொதுமக்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு, சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சிறிது நேரம் பொழுதைக் கழித்துவிட்டு வீடு திரும்புகின்றனர்.
தினசரி பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சிறுமலை பகுதியில் பொழுதுபோக்கிற்காக போதிய ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தியது.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இந்நிலையில், சிறுமலையில் இருந்து தென்மலை செல்லும் வழியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்களுடன், பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி, கிட்டத்தட்ட 96 % பணி நிறைவடைந்துள்ளது.
இந்தப் பல்லுயிர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு சாதனங்கள், மற்றும் அழகு செடிகளுடன் கூடிய பூங்கா, இயற்கை காட்சிகளை காண்பது உயர் கோபுரம், வனவிலங்குகளின் உருவம் போல் வளர்க்கப்பட்ட செடிகள், குடும்பங்களோடு அமர்ந்து அரட்டை அடிக்க, பச்சை போர்வை விரித்தது போல் இருக்கும் பசும் புல்வெளிகள், ஏராளமான மர வகைகள் மற்றும் செடி வகைகள், சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் தொட்டி அமைத்து தெளிப்பு நீர் பாசனம் முறையில் பராமரித்து வருகின்றனர். இந்தப் பல்லுயிர் பூங்காவின் பணிகள் இன்று ஓரிரு மாத நிறைவு பெற சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமலை
இந்நிலையில், தற்போது அப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் பல்லுயிர் பூங்காவின் நுழைவாயில் அமைந்திருப்பதை கண்டு வியந்து வருவதுடன், விரைவில் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: