தமிழக பகுதிகளில் கோடை காலம் தொடங்கிவிட்டது . பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சுழலில் ஏப்ரல் மாதம் முழுவதும் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ஏப்ரல் மே மாதங்களில் அதிகபட்சமாக 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் மாவட்டத்தில் வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்ச மாவட்டத்தில் வெப்ப நிலை 28 செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வரண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மழை பெறுவதற்கு நான்கு முதல் ஐந்து சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
சராசரி மாவட்டத்தில் 37 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது
வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெளியே செல்வது அவசியமாக உள்ளது. தரமான சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்வது , வெளியே செல்லும் பொழுது குடை பிடித்து செல்வது, லேசான ஆடை அணிவது, நீர் நிரம்பிய பழங்கள் சாப்பிடுவது, காரங்கள் அதிகம் கலந்த உணவுகளை தவிர்ப்பது , மதிய வேலைகளில் தேவை இன்றி சுற்றுவதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை செய்யும் போது வெயிலில் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: