செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் தற்போது பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் நினைத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். வீட்டில் நடக்கும் விசேஷங்களைப் போல் செல்லப்பிராணிகளுக்கும் விசேஷங்கள் நடத்துவது. குடும்பத்தில் ஒரு நபரைப் பார்த்துக் கொள்வது கொஞ்சி விளையாடுவது மேலும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் மீது அதிக அன்போடு, அக்கறையுடனும் இருப்பதையும் தற்போது அதிகமாக சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

செல்லப்பிராணிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் நாள் தேசிய செல்லப்பிராணிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு நோய் பரவும் காலங்களில் செல்லப்பிராணிகளைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவர் பிரபு நம்மிடம் பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

குடற்புழு நீக்கம்

“முன் காலத்தில் வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட நாய்கள். குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.இதைத் தடுப்பதற்காகத் தான் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

வெறி நோய் தடுப்பூசி

அடுத்ததாக வெறி நோய் தடுப்பூசி மூன்று மாதத்திற்கு அடுத்து கண்டிப்பாக அனைத்து வகையான நாய்களுக்கும் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாய்களில் இருந்து பரவக்கூடிய கொடிய நோய் என்றால் அது வெறி நோய் தான். எனவே அனைத்து நாய்களுக்கும் மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குட்டிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டு பராமரித்துக்கொண்டால் மிகவும் பாதுகாப்பு. மேலும் அதற்கும் சில தடுப்பூசிகள் எல்லாம் இருக்கிறது அதனை கால்நடை மருத்துவரிடம் நேரடியாக அணுகிச் செல்லப்பிராணிகளைக் கண்டறிய ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

வெயில்கால ​​பராமரிப்பு

வெயில் காலங்களில் நாய்கள் நாக்கினை தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பது அதற்குக் காரணம் என்னவெனில் நாய்கள் தங்களின் சூட்டினைக் குறைப்பதற்காக நாக்கு மூலமாக அந்த வாணியை வெளியேற்றும். அதிகமான உஷ்ணம் இருப்பதாலேயே நாய்கள் நாக்கினை தொங்கவிட்டவாறு படுத்திருக்கும்.

இதனை தடுப்பதற்கு பகலில் நாய்களை நன்கு குளிப்பாட்டலாம், ஐஸ்கிரீம் நாய்களுக்கு கொடுக்கலாம், ஐஸ் வாட்டர் கொடுக்கலாம். குளிர்ச்சியான இடங்களில் நாய்களை வைத்திருப்பது நாய்களுக்கு உஷ்ணத்தைக் குறைத்து அந்த இளைத்தலானது தானாகவே நின்று விடும். அதிகமாக வெயிலை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் பொமேரியன், பக் வகையான நாய்கள் ஆகியவை குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியவை அதை இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும். வெப்பத்தினால் அதற்கு ஹிட் ஸ்ட்ரோக் வந்துவிட்டால் அது இறக்க கூட நேரிடும்.

இதனை தடுக்க தலையில் ஐஸ் ஜெல் பேக்கை வைக்கலாம், குளிர்ச்சியான நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு செல்லப்பிராணிகளுக்கும் மதிய நேரத்தில் உணவு கொடுக்கக் கூடாது. எந்த உணவு கொடுத்தாலும் காலை 9 மணிக்கு உள்ளே கொடுக்க வேண்டும். அதன் பின் மாலை நேரத்தில் மதிய வேலைகளுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வாக்கிங் கூட்டி செல்லும் போது கவனிக்கவேண்டியவை:

மழைக் காலங்களில் தொற்று நோய்கள் அதிகமாக பரவும் அதாவது நாயை வாக்கிங் கூட்டி சென்று விட்டு வந்தால் கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் தோல் வியாதிகள், தொற்று நோய்கள் மற்ற தெரு நாய்கள் மூலமாக வளர்ப்பு நாய்கள் பரவி விடும்.

மேலும் நாய்கள் மட்டுமல்லாது பூனைகள், பறவைகள் ஆகியவற்றிற்கும் இதே வழிமுறைகள் தான் முடிந்த அளவிற்கு குளிர்ச்சியான பகுதிகளில் வைத்திருக்க வேண்டும். மதிய வேலைகளில் உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் தண்ணீர் அதிகமாகக் கொடுக்க வேண்டும். இவையாவும் செல்லப் பிராணிகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகும் . மேலும் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற்று பாதுகாக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link