மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வடைந்து 60,049 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 17,686 ஆக இருந்தது.

ஆறுநாட்கள் லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 403.84புள்ளிகள் உயர்வடைந்து 60,250.35 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி113.55 புள்ளிகள் உயர்வடைந்து 17,737.60ஆக இருந்தது.

மார்ச் காலாண்டு வருவாய் மற்றும் சில்லறை பணவீக்கத் தரவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இந்த நிலையில் வாகனம், நிதி சேவை, வங்கி ஆகிய துறைசார் பங்குகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. அனைத்துத்துறை பங்குகளும் இன்று லாபத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை கோடாக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டாஃப்சி பேங்க் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க் உள்ளிட்டவற்றின் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.





Source link