சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் குறித்து, பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 300-ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.Source link