அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதாரமான முறையில் கையாள்வது, பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த ஒரு வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?
பள்ளிகளில் குறைந்த விலையில், இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் பாதுகாப்பாக அகற்றும் வழிமுறைகள், இந்தக் கொள்கை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

மாதவிடாய் சுகாதாரம் குறித்து கொள்கை வகுப்பில் மாநிலங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. மாநிலங்கள் தங்களது அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கைகளை 4 வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், மூன்று மாதங்களில் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின், இவ்வழக்கில் வழிகாட்டும் முறைகளுடன் கூடிய தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.