மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் முப்புடாதி (வயது 43). இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது முப்புடாதியின் தந்தை மற்றும் தாய் உயிரிழந்த சூழலில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை முப்புடாதி இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் அவர் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, ​​உயிரிழந்த பெண்ணின் உடலில் ரத்த காயங்கள் அதிகமாக இருந்தது, அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

அதனை தொடர்ந்து மேல் பிரேத பரிசோதனை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பெண்ணின் உடலை அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : ச.செந்தில் தென்காசி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link