செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சு உலக அளவில் வைரலாக உள்ளது. பெரும்பாலான இணைய பயனர்கள் அதன் சாதகங்கள் குறித்து பேசி வருகின்றனர். இருந்தும் சிலர் அதில் உள்ள பாதகங்கள் குறித்தும் அண்மைய நாட்களாக பேசி வருகின்றனர். அந்த வகையில் ஈஐ மாடல்கள் இணைய பயனர்கள் பொதுவாக பயன்படுத்தும் எளிய பாஸ்வேர்டுகளை நொடிகளில் கிராக் (கண்டறிவது) செய்வதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான வலைதளங்கள் தங்கள் பயனர்களிடம் வலுவான பாஸ்வேர்டுகளை உள்ளிடும் டி தெரிவிப்பது வழக்கம். ஆங்கில எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டரை பயன்படுத்துமாறு அந்த தளங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு வேண்டி இது சொல்லப்படுகிறது.Source link