பிரதமரின் நரேந்திர மோடி இந்தியாவுக்குள் சென்றாலும் சரி வெளிநாடுகளுக்கு சென்றாலும் சரி, தான் செல்லும் இடத்துக்கு ஏற்றவாறு உடை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். தமிழகம் வந்தால் இங்குள்ள கலாச்சார உடையான வேட்டி அணிவது, பழங்குடி மக்களை சந்திக்க சென்றால் அவர்களின் உடை அணிவது, வெளிநாடுகளுக்கு சென்றால் கோஸ் சூட் அணிவது என தன் பயணத்துக்கு ஏற்றவாறு மிடுக்கான ஆடைகளை அணிவார். இவர் அணியும் ஆடைகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி அணிந்திருந்த கேமோ டிசர்ட் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு வந்த மோடி, கேமோ டிசர்ட், காக்கி பேண்ட், ஜாக்கெட், தொப்பி ஆகியவை அணிந்து ராணுவ வீரர் மற்றும் சுற்றுலா பயணி இந்த இரண்டும் கலந்த தோற்றத்தில் காட்சியளித்தார். பிரதமரின் புகைப்படங்களை பா.ஜ.கவினர் சமூகவலைத்தளங்களில் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.