புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பீட்டில் ஈடுபட்டு வரும் சௌ.மாரிக்கண்ணன் அவர்களின் கணிப்பு தமிழ் புத்தாண்டிற்கான 12 ராசிகளின் பலன்கள்.

மேஷம்

உங்களது பூர்வ புண்ணிய பலம் கூடுகின்ற நேரம். உங்களது பூர்வீக சொத்துக்களில் இருந்த சங்கடங்கள் நீங்கி வழக்குகளில் இருந்து விடுபட்டு நன்மை அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை செய்யும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவோருக்கு வெற்றியும் கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் குலதெய்வ வழிபாடும் உங்கள் உயர்வை மேலும் கூட்டும்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

ரிஷபம்

சில சங்கடமான சூழ்நிலையில் சற்று எளிமைப்படுத்தி கொடுக்கும் நேரம் புதிய பிரச்சினைகளும் ஏற்படும். உங்கள் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிக பணம் செலவாகும். படிப்பு வேலைவாய்ப்பில் சற்று தடையும் தாமதம் ஏற்படும். சில சுப காரியங்கள் மூலம் செலவுகள் உண்டாகும் . குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசிக்கவும்.

மிதுனம்

உங்கள் உடல் நலம் சிறப்படையும். மனதில் உறுதியுடன் தொடர்ந்து வெற்றிகள் குவிப்பீர்கள். வேலை வாய்ப்புகள் மிக அருகில் உள்ளது. சிலருக்குத் தொழில் மற்றும் வேலையின் காரணமாக இடம் விட்டு இடம் செல்ல நேரிடும். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது போட்டி தேர்வுகளில் வெல்லவும் வாய்ப்புண்டு. உடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு சிறு சிறு செலவுகள் ஏற்படும். மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு மற்றும் ஊனமுற்றோருக்கு உதவியும் செய்திடுக.

கடகம்

உடல் நலத்திற்கு எச்சரிக்கை தேவை. உடல் நலத்திற்காக செலவு அளிக்க நேரிடும். சில கடன்களை தீர்ப்பீர்கள் சில பிரச்சனைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். குழந்தைகள் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. சக்தி வழிபாடும், படிப்புக்கு உதவுதலும் நன்மை தரும்.

சிம்மம்

உங்கள் வெற்றியையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்கின்ற காலம். உடல் நிலை சிறப்படையும். சில காரியங்களை சாதிக்க இருக்கின்றீர்கள். தடைப்பட்டு நின்ற திருமணம் நடைபெறும். வீழ்ச்சி அடைந்த பிள்ளைகள் வாழ்வில் வளம் உண்டாகும், வாழ்வு சிறக்கும், வேலை கிடைக்கும்.

கன்னி

யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உடல்நிலையில் கவனம் தேவை. தனிப்பட்ட முறையில் பண விஷயங்களை கையாள வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு செலவழிக்க நேரிடும். தாயின் உடல் நலம் சீராகும். பெருமாள் கோவில் வழிபாடு மேலும் விதவைகளுக்கு உதவுதல் நன்மையை தரும்.

துலாம்

மனது துணிவையும் சிறந்த ஞானத்தையும் பெறுவீர்கள். உடல்நலம் சிறப்படையும். திருமணம் கூடி வரும் செய்தொழில் உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். தடைபட்டு இருந்த சொத்துக்கள் கிடைக்கும். இருப்பினும் ஒரு பகுதியை விற்க நேரிடும் தாய் வழி சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படும். இயக்கிரங்கம் சென்று வழிபடவும் ,அனாதை குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவுதல் போன்றவை மேலும் நன்மைகளை தரும்.

விருச்சிகம்

தொழில் மேன்மை அடையும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உடல்நலம் சிறப்படைவதாலும் மனதில் துணிவு பெருகுவதால் அற்புதமான காரியங்களை சாதிக்க போகின்றீர்கள். சிலருக்கு பல நல்ல காரியங்களுக்காக இடப்பெயர்ச்சி உண்டாகும். கடன் வாங்கி சுப காரியங்களை செய்வீர்கள். பிள்ளைகள் நிலை உயரும் .அவர்கள் உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. முருகனை வழிபட்டு பறவைகளுக்கு உணவிட்டு மேலும் நன்மைகளை பெறுங்கள்.

தனுசு

உடல் நலமும் மன பலமும் மேன்மை அடையும்.அதனால் செயற்கரிய செயல்களை செய்து முடிப்பீர்கள்.தனி மரியாதை கிடைக்கும். லாபங்கள் குவியும். உத்தியோகம் உயர்வு உண்டாகும். திருமண யோகம் கூடிவரும். பூமி ,மனை வந்து சேரும். தந்தைக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும் .தாய்க்கு பூரண குரு அருள் உண்டு .மனைவி மூலம் சில லாபங்கள் உண்டு .சிவனை வழிபட்டு மேலும் நன்மைகளை அடையுங்கள்.

மகரம்

உடல் பிணியிலிருந்து விடுபடுவீர்கள். தங்களின் தொழிலில் கனிசமான உயர்வும் பணவரவும் இருந்தாலும் அனைத்தும் விரயம் ஆகிவிடும். எனவே சுப விரயங்கள் செய்து தீய விஷயங்களை தடுத்துக் கொள்ளுங்கள். தந்தைக்கு செலவு செய்து உடல் நலத்தை மீட்டெடுக்க வேண்டியது இருக்கும். தாய் வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பணி விஷயங்களில் எச்சரிக்கை தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு ஊனமுற்றோருக்கு உதவுதல் போன்றவை மேலும் நன்மைகளை அளிக்கும்.

கும்பம்

பூரண நலத்துடன் திகழ்வீர்கள். தொட்டது துலங்கும். தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும். தந்தை வழியில் உயர்வும் ஆதாயமும் உண்டு. பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பும் வேலைவாய்ப்பும் உயரும் . தொழிலாளர்கள் மேன்மை அடைவீர்கள். பெருமாள் வழிபாடு செய்து பலன் பெறலாம்.

மீனம்

நீண்ட நாட்களாக இருந்த உடல் பிணி விலகும் .அதே போல் வாங்கிய கடனை அடைப்பீர்கள் . குழந்தைகள் படிப்பில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழில் வேலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதில் மன அமைதி கிடைக்காது. யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். பணத்தை இழக்க நேரிடும். சற்று கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மையை தரும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link