பெப்சி தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி

11 ஏப், 2023 – 18:44 IST

எழுத்தின் அளவு:


FEFSI தலைவர் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார்

பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது.

இதனால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர துணைத் தலைவர்கள் பதவிக்கு சபரிகிரிசன், தினா, மோகன மகேந்திரன், தவசிராஜ், மாரி ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பொறுப்பு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் பெப்சி அமைப்பில் இணைந்திருக்கும் 24 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.





Source link