ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற முடியாத நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்ற போதிலும் மும்பை அணி கடந்த சீசனிலும், தற்போதைய சீசனிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணியும், 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணியும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் அடிப்படையில் ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் டெல்லியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டிம் டேவிட், சூர்ய குமார் யாதவ், கேமரூன் கிரீன் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், எதிர்பார்த்த அளவு திறமையான ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்த தவறிவிட்டனர்.
காயம் காரணமாக ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவாகவே உள்ளது. புதிய கேப்டனாக அனுபவம் மிக்க டேவிட் வார்னர் வழிநடத்தினாலும் ஓட்டு மொத்த அளவில் 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வார்னருடன் மனிஷ் பாண்டே, ரிலீ ரூசோ, ரோவ்மன் பவெல், அக்சர் படேல் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் அணியில் உள்ளனர். இன்று மோதும் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: