டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார். இப்போட்டியில், விராட் கோலி 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2023-யில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 164 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் 2 அரைச்சதம் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 147 ஆக உள்ளது. டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 115 போட்டிகள் மற்றும் 107 இன்னிங்ஸ்களில் 4,008 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு சதம் மற்றும் 37 அரை சதங்களை அடித்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 122* ரன்களாக உள்ளது.

34 வயதாகும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 226 போட்டிகள் மற்றும் 218 இன்னிங்ஸ்களில் விளையாடிய கோலி 6,788 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 5 சதங்கள் மற்றும் 46 அரைச் சதங்கள் அடங்கும். இந்நிலையில் நேற்று லக்னோவுக்கு எதிராக அவர் அடித்த 61 ரன்கள் மூலம் ஒட்டுமொத்த டி20 அதிக ரன்களை எடுத்துள்ள 4 ஆவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.22, ஸ்ட்ரைக் ரேட் 144.75. பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 510 போட்டிகளில் விளையாடி 12,528 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் 3 ஆவது இடத்திலும், விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 11,392 ரன்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link