அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், போஸ் வெங்கட், பிரீத்தி அஸ்ராணி, அஞ்சு அஸ்ராணி, யஷ்பால் ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அயோத்தியில் தீவிர இந்து குடும்பம் ஒன்று ராமேஸ்வரத்திற்கு தீபாவளியை ஒட்டி புனித யாத்திரைக்கு வருகிறது. வந்த இடத்தில் திடீர் விபத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழக்கிறார். ஊர் பேர் தெரியாத இடத்தில் தவிக்கும் அவர்கள் இறந்தவரின் சடலத்துடன் எப்படி மீண்டும் ‘அயோத்தி’ திரும்பினார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.