எப்படியோ பூரணின் பவறாலும் பெங்களூர் பந்துவீச்சாளர்களின் தவறாலும் லக்னோ தப்பிப் பிழைத்தது. ஆட்டம் முடிந்து ராகுல் “மூன்று விக்கெட்களை இழந்துவிட்டோம். நான் கடைசிவரை களத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்” என்று கூறினார். பழைய பெங்களூர் பாசத்துக்காக கூறினாரா அல்லது 30 ஓவர்கள் சென்ற பிறகு பந்து பழையதாகும் என்ற நம்பிக்கையில் கூறினாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஆவேஷ் கான் ஓடிய ஒரு ரன்னுக்கே அவ்வளவு ஆவேசப்பட்ட கம்பீர், ராகுல் உள்ளே வந்தவுடன் ஆங்கில கேங்ஸ்டர் படம் போல வார்த்தை அர்ச்சனைகள் செய்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

இதேபோலத்தான் இந்திய கேப்டன் ஹிட்மேன், முதல் போட்டியில் இதே சின்னசாமி மைதானத்தில் பத்து பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. ரோஹித், கோலி, ராகுல் – அணியின் டாப் 3 வீரர்களும் இப்படி பெங்களூர் டிராஃபிக் போல மெதுவாக ஆடினால் அடுத்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி கூட வாய்க்காது. ஆப்கானிஸ்தான் கூட அசால்டாக இந்தியாவை ஆஃப் செய்து விடும்.



Source link