டெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்து வருகின்றன. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.Source link