இந்தி சீரியல்களில் நடித்து வந்த ஊர்ஃபி ஜாவேத் கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-ல் கலந்துகொண்டு பிரபலமானவர். பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இப்படிக் கவர்ச்சியான உடைகளை அணிவதால் பலரது விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ஆளாகி வருகிறார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து உர்ஃபி ஜாவேத் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “எனக்கு 15 வயது இருக்கும்போது யாரோ எனக்குத் தெரியாமலேயே எனது புகைப்படத்தை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள். இந்தத் தகவல் என்னுடைய உறவினர்கள் மூலம் என் தந்தையின் காதுக்குச் சென்றது. என்னைப் புரிந்துகொள்ளாத எனது தந்தை, என்னை அடித்து சித்ரவதை செய்து உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் துன்புறுத்தினார்.