மேலும், ”குழந்தைகளிடையே கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. அவர்கள் சிறிய சுவாச தொற்றுநோய்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு கோவிட் இருப்பது கண்டறியப்படுகிறது. முக்கியமாக கடந்த இரண்டு வாரங்களாக பள்ளி செல்லும் குழந்தைகள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான சந்தர்பங்களில் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொற்றுநோயைப் பெறுகிறார்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று வசிஷ்தா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கள் கிழமை இந்தியா முழுவதும் 5,880 மருத்துவ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் மாஸ்க் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் கை கழுவுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.