ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஒட்டுமொத்தமாக 600 பவுண்டரிகளை அடித்து சாதனை படைத்துள்ளார். நடப்பு சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த சாதனை அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. நேற்று மும்பை அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் வார்னர் தனது 600 ஆவது பவுண்டரியை, ஐபிஎல் தொடரில் அடித்தார்.

இந்த போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்ட அவர், 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவற்றில் 6 பவுண்டரிகள் அடங்கும். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் வார்னர் 604 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மிக அதிகமான பவுண்டரிகளை அடித்தவர் என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் செய்தார். மொத்தம் 209 போட்டிகளில் விளையாடி 728 பவுண்டரிகளை தவான் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகளை அடித்தவர்கள் வரிசையில் விராட் கோலி 3 ஆவது இடத்தில் உள்ளார். இவர் ஒட்டுமொத்தமாக 591 பவுண்டரிகளை விளாசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (528), சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா (506) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை டெல்லி அணி பிடித்துள்ளது. தொடர் தோல்விகள் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். கேப்டன்ஷிப் தவிர அவரது ஆமை வேக பேட்டிங், டெல்லி அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link