தென்னிந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், மே மாதம் 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் மாறி மாறி வாக்குறுதிகள் அளித்துவருகின்றன. மேலும், இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஆம் ஆத்மியும் களமிறங்குகின்றன.

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

இந்த நிலையில், பா.ஜ.க வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலால், முன்னாள் முதல்வர் உட்பட பா.ஜ.க-வில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்குக் காரணம், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க., 52 புதுமுகங்களைத் தலைமை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், இதில் வாய்ப்பு மறுக்கப்பட்ட உடுப்பி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. ரகுபதி பட், கட்சி நடத்திய விதம் வேதனையளிப்பதாகவும், `சாதி காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.Source link