பசுமைக்குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கலாம், என நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் தற்போது, ​​கோடை வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் கோடை காலத்தில் போதிய அளவு தீவனங்கள் கிடைக்காத போதும், ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசு தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.

மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறையில் 5 முதல் 7 நாட்களில் சுமார் 5 முதல் 7 மடங்கு வரை மக்காச்சோள பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். விதைகளை (தானியங்கள், பயறு வகை விதைகள்) 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தட்டுகளில் 7 நாட்கள் வரை வைத்து வளர்க்க வேண்டும். ஒரு கிலோ பசுந்தீவன உற்பத்திக்கு 3 முதல் 4 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் தேவைப்படும்.

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தை கால்நடைகள் விரும்பி உண்ணும் மற்றும் இந்த வகை தீவனம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. கறவை மாடுகளுக்கு 10 முதல் 15 கிலோ, ஆடுகளுக்கு 1 முதல் 2 கிலோ, முயல்களுக்கு 1/2 கிலோ, கோழிகளுக்கு 100 கிராம் வரையிலும் இந்த பசுந்தீவனம் அளிக்கலாம். கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களை பராமரிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கொட்டகையின் மேற்கூறையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி, பகல் நேரத்தின் அதன்மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்பதாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம். கறவை பசுக்களில் ஒரு பசுவுக்கு நாள் ஒன்றுக்கு 30-50 கிராம் என்ற அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ் தாது உப்பு கலவையை அளிக்க வேண்டும். விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாண்டு தங்களின் கால்நடைகள் மற்றும் கோழிகளை வெப்ப தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link