சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மயில்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

தோனி கேப்டனாக களமிறங்கும் இந்தப்போட்டி சென்னையில் நடக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கில்லி படத்துல விஜய் சொல்லுற மாதிரி “ இந்த ஏரியா, அந்த ஏரியா, எங்கேயுமே எனக்கு, பயம் கிடையாது டா… ஏன்னா ஆல் ஏரியாலேயும், அய்யா கில்லி டா…”. என சென்னை வீரர்கள் காலரை தூக்கிட்டு போவார்கள் ஏன்னா சென்னை அணிக்கு அப்படி ஒரு ஃபேன் பேஸ் இருக்கு. ‘

இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் கிரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். எதிரணிக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் தோனியின் மஞ்சள் படையை பார்க்கும்போது.

மேலும் படிக்க: சிஎஸ்கே-வில் ரஹானே.. தோனி என்ன லாஜிக் இது – சேவாக் விளாசல்

அப்படி இருக்க தோனி கேப்டனாக களமிறங்கும் 200வது போட்டி அதுவும் சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்ல ஃபேன் சப்போர்ட் சொல்லவே வேணும். சிஎஸ்கே வீரரான ஜடேஜாவோ நானே பெரிய ‘தல’ ஃபேன் தான் அப்புறம் தான் சென்னை ப்ளேயர் எல்லாம் என தெறிக்கவிட்டிருக்கார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனா 200 ஆவது போட்டியில் தோனி களமிறங்கினார். கேப்டனாக 200 ஆவது போட்டியில் விளையாடும் தோனிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றியை பரிசாக தருவோம்” என அதிரடியாக சொல்லியிருக்கார் ஜடேஜா..

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link