`அதானி நிறுவனத்தில் ரூ.20,000 கோடி யாருடையது?’- தொடர்ந்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி சொன்னபடியே பதவிநீக்கத்துக்குப் பின்னரும் தொடர்ச்சியாக அதானி – மோடி – சீன நாட்டவர் குறித்த கேள்விகளைப் பொதுவெளியில் தொடர்ந்து எழுப்புகிறார். கடந்த வாரம் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.20,000 கோடி பற்றி பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார். அது பினாமி பணமென்றால், அதன் உரிமையாளர் யார்?” என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்திலும் இதே கேள்விகளை எழுப்பி, “பிரதமரே, ஏன் இத்தனை பயம்?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் ட்விட்டர்

ராகுல் ட்விட்டர்

தொடர்ந்து மற்றொரு ட்விட்டர் பதிவில் அதானியுடன் சீன நாட்டவர் சாங் சங் லிங் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், “PMC திட்டங்கள் – ‘பிரதான் மந்திரி சீன’ திட்டங்கள்? – இந்தியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்கள், விமான ஓடுபாதைகள், ரயில் பாதைகள், மின்சாரப் பகிர்மானப் பாதைகள் உள்ளிட்டவை ஏன் சீன நிறுவனத்தால் அமைக்கப்படுகின்றன?” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மோடி-அதானி

மோடி-அதானி

இது தொடர்பாக அதானி நிறுவனம், “அதானி குழும புரொமோட்டர்கள், அதானி நிறுவனத்தில் கனிசமான பங்குகளை வைத்துள்ளனர். அவர்கள் அதானி டோட்டல் காஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகள் ஆகியவற்றை பிரான்ஸைச் சேர்ந்த டொட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துக்கு விற்று 287 கோடி டாலர் திரட்டினர்.

2019-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக இந்தப் பணம் திரட்டப்பட்டது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இப்படிக் கிடைத்த பணத்தில் 255 கோடி டாலர் (ரூ.20,000 கோடி) அதானி குழும துணை நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றில் மறுமுதலீடு செய்யப்பட்டது.



Source link