மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 235 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயர்ந்து 60,392 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்வடைந்து 17,812 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் லாப நஷ்டமின்றி தட்டையாக தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 54.33 புள்ளிகள் உயர்வடைந்து 60,212.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,749.90 ஆக இருந்தது.



Source link