ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். இந்த மழை நாட்டின் நீர்த்தேவையில் பெரும்பான்மையை நிறைவேற்றுகிறது. இந்தத் தென்மேற்குப் பருவமழையால் அரபிக்கடலையொட்டியுள்ள மாநிலங்கள் முதல் மத்திய மாநிலங்கள் வரை மழை பெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவுக்கு பொழியும். இது தோராயமாக நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநர் மிருதியுஞ்சய் மொகபத்ரா பேசுகையில், “இயல்புநிலை அல்லது அதற்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவிகிதம் வாய்ப்புள்ளது. வட மேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இயல்பு அல்லது அதற்கு மேலான அளவில் பொழியும்.