வாஷிங்டன்: “ட்விட்டரை நிர்வகிப்பது என்பது சற்று வேதனையானது, ரோலர் கோஸ்டர் ரைட் போன்றது” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மாஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். மேலும், வெரிஃபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் நாய் லோகோவை மாற்றினார். இதனால், டாக்காயின் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு சந்தையில் அதிகரித்துள்ளது. பின்னர் மீண்டும் நீலகுருவியை லோகோவாக எலான் மஸ்க் வைத்தார். ஆனால், இதற்குப் பின்னணியில் வணிக நோக்கம் உள்ளது என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.



Source link